"உங்கள் பார்வை உலகம் தழுவியதாக இருக்கட்டும்..." பஹாவுல்லா

 

வரலாற்று காலம் முழுவதும், தெய்வீக அவதாரங்களின் மூலமாக கடவுள் மனிதகுலத்திற்குத் தம்மை வெளிப்படுத்தி வந்துள்ளார். அந்த அவதாரங்களின் வாயிலாக நமக்கு வழிகாட்டவும் கல்வியூட்டவும் செய்து, மனித சமுதாயத்தின் மேம்பாட்டுக்கான அடிப்படையை வழங்கி வந்துள்ளார். இந்த தெய்வீக அவதாரங்களின் வரிசையில் வந்தவர்களுள் தலையாய அவதாரங்களாக ஆபிரகாம், கிருஷ்ணர், மோசஸ், புத்தர், இயேசு, முகம்மது நபி போன்றோர் அடங்குவர். இவர்கள் அனைவரின் சமயங்களும் ஒரே தோற்றுவாயைக் கொண்டுள்ளன என்பதோடு அச் சமயங்கள் யாவும் கடவுளின் ஒரே சமயத்தின் அடுத்தடுத்த வெளிப்பாடுகளும் ஆகும்.

 

இந்த தெய்வீக அவதாரங்களின் வரிசையில் ஆகக் கடைசியாக வந்தவர்தான் பஹாவுல்லா. பஹாவுல்லா அவர்கள், இக்காலத்திற்குத் தேவையான புதிய ஆன்மீக மற்றும் சமூக போதனைகளைக் கொண்டுவந்துள்ளார். கடவுள், மனிதகுலம் மற்றும் சமயங்களின் ஒருமைப்பாடு குறித்து போதித்தார்.

 

“உலகம் ஒரே நாடு, மனிதர்கள் யாவரும் அதன் பிரஜைகள்,” என பஹாவுல்லா கூறியுள்ளார். அதோடு, கடந்த காலத்தின் அனைத்து புனித நூல்களிலும் முன்கூறப்பட்டுள்ளது போல் மனிதகுலம் ஒற்றுமையோடு வாழ வேண்டிய காலம் இதுவே எனவும் பஹாவுல்லா கூறுகிறார்.

1844ம் ஆண்டு உருவான பஹாய் சமயம், இன்று உலகம் முழுவதும் பரவியுள்ளது. பஹாய் சமயத்தின் உறுப்பினர்கள் இன்று 100,000க்கும் அதிகமான உள்ளூர்களில் வசித்து உலகின் ஒவ்வொரு நாடு, இனக்குழு, கலாச்சாரம், தொழில், மற்றும் சமூக அல்லது பொருளாதாரப் பின்னனியைச் சார்ந்தவர்களாக இருக்கின்றனர்.

 

மனிதக்குலத்திற்கு இன்று ஒரு முக்கிய தேவை உள்ளதென பஹாய்கள் நம்புகின்றனர். முதலில், மனிதவாழ்வின் இயல்பு, நோக்கம் ஆகியவை, பிறகு சமுதாயத்தின் வருங்காலம் எனும் இரண்டையும் ஒன்றுபடுத்தக்கூடிய தூரநோக்கை மனிதர்கள் இன்று பெறவேண்டும் என்பதே அந்தத் தேவையாகும். பஹாவுல்லாவின் புனித எழுத்துக்களில் இது குறித்த ஒரு தூரநோக்கு வெளிப்படக்காணலாம்.

 

  • பெங்களூர் மாநாடுbangalore03

    ஐந்தாண்டு திட்டத்தின் சாதனைகளைக் கொண்டாடவும் அதன் தேவைகளைக் கருத்தில் கொள்ளவும் நான்கு வாரங்களுக்கு முன் உலக நீதி மன்றத்தால் ஆணையிடப்பட்ட 41 மாநாடுகளில் ஒன்றான 15-16 நவம்பர் பெங்களூர் வட்டார மாநாட்டில் 1,500க்கும் அதிகமான நண்பர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர். இம்மாநாட்டிற்கு இந்தியா முழுவதிலிமிருந்து பங்கேற்பாளர்கள் வந்திருந்தனர். (மேலும் விவரங்களுக்கு...)

     

 

  • வட்டார பஹாய் மாநாடுகளில் மகத்தான பங்கேற்பு..(மேலும் படிக்க..)
  • நிழல்படத் தொகுப்பு இணையத்தளத்தில் ஏற்றம். .(மேலும் படிக்க..)
  • மாநாடுகள் வரிசையில் ஸாம்பியா ஒன்றுகூடலே முதலாவதாகும்..(மேலும் படிக்க..)
  • உகாண்டா சமூகப் பொருளாதாரத் திட்டம் கல்வியறிவு திட்டத்தோடு நிற்கவில்லை.(மேலும் படிக்க..
  • சமயக் குழுக்களுக்கான உலகமய கருத்தரங்கை ஐ.நா ஒன்றுகூட்டியது. (மேலும் படிக்க..

  • பஹாய்கள் அனைத்துலக வறுமை ஒழிப்பு நாளை அனுசரிக்கின்றனர்.(மேலும் படிக்க..)

  • இரான் நாட்டில் வெளியாகியுள்ள அறிக்கை ஷிராஸ் பஹாய்கள் குற்றமற்றவர்கள் என்பதைச் காட்டுகிறது.(மேலும் படிக்க..)

  • பஹாய்களுக்கெதிரான இரான் நாட்டு அரசாங்கத்தின் அத்துமீறல்களை ஐ.நா.வின் அறிக்கைச் சுட்டுகிறது.(மேலும் படிக்க..)

  • புனித பாப் அவர்களின் பிறந்த நாளை பஹாய்கள் கொண்டாடுகின்றனர்.(மேலும் படிக்க..)

  • வலைப்பதிவு(Blog) நடவடிக்கை தினம் சமூக செயல்பாட்டிற்கான ஒற்றுமையை உருவாக்குகிறது, என்கிறார் அதன் ஏற்பாட்டாளர்.(மேலும் படிக்க..)

  • நோயுற்றோருக்காகப் பிரார்த்திப்பது – அந்நோய் தீர்க்க துணைபுரிகிறதென அறிவியல் நிரூபிக்கமுடியுமா? (மேலும் படிக்க..)

  • கடினங்கள் மிகுந்த நகரின் இளைஞர் நிகழ்ச்சி இன்றியமையா "அம்சமான – 'நம்பிக்கையை' வழங்குகின்றது. (மேலும் படிக்க..)

  • ரீய்ட், ஆஸ்திரியா -- இசையமைப்பாளர் திரு ரஸ்சல் கார்ஷியாவுக்கு 92 வயதாகின்றது ஆனால் அவர் இன்றும் இசையமைத்துக்கொண்டிருக்கின்றார். (மேலும் படிக்க..)

  • அமெரிக்க ஜாஸ் இசையமைப்பாளர்கள் 2008 ஒலிம்பிக் விளையாட்டுக்களில் பயன்படுத்தப்படும் ஒரு வெற்றிப் பாடலை எழுதியுள்ளனர்.(மேலும் படிக்க..)
  • பஹாய்கள் மீதும், நோபல் பரிசாளர் ஷிரின் எபாடி அவர்களின் மீதும் இரான் நாட்டின் தகவல் சாதனங்கள் நடத்தும் தாக்குதல்கள் "அறிவுக்கொவ்வாத பயம் மற்றும் தப்பெண்ணங்களை" உருவாக்க முயலுகின்றன.(மேலும் படிக்க..)
  • கடவுளின் அன்மையை உணர்கின்றனர்(மேலும் படிக்க..)
  • பஹாய் புனித ஸ்தலங்கள் உலக {மரபுடைமைத்} யுனெஸ்கோவின் அதிகாரப்பூர்வ வலைப்பக்கம் தலங்களாகத் தேர்வு(மேலும் படிக்க...)

{முன்வந்த செய்திகள்}இங்கு உலக செய்திகளின் தமிழ் மொழிபெயர்ப்புக்களின் முழு பட்டியலையும் காணலாம்|{ஆங்கில மூலம்}மூலச் செய்திகளை ஆங்கிலத்தில் இங்கு காணலாம்

 

"இக்காலக்கட்டத்தில் உள்ள  கற்றோரும் உலக அறிவுடையோரும் மனிதகுலத்தை தோழமை மற்றும் அன்பு எனும் நறுமணத்தை நூகர்ந்திட அனுமதிப்பார்களேயானால், உண்மையான சுதந்திரத்தின் அர்த்தத்தை புரிந்துகொள்ளும் ஆற்றலுடைய உள்ளம் ஒவ்வொன்றும் கிரகித்தும், குலைக்கமுடியாத அமைதியையும் முழுமையான அமைவடக்கதின் இரகசியத்தையும் கண்டுகொள்வர்"

-பஹாவுல்லா-

 

 

கோப்பைத் திறக்க இங்கே சொடுக்கவும்.
☛ கடவுள் ஒருவரே
☛ சமயங்கள் அனைத்தும் ஒன்றே
☛ மனிதகுலம் ஒன்றே

 

இணைப்புக்கள்:

 

importantlinksஇங்கு பஹாய் சமயம் சார்ந்த சில முக்கிய இணையத்தளங்களின் விவரங்களைக்காணலாம்

 

உலக நீதி மன்றம்

 

தொடர்புகள்...

பன்மையில் ஒருமை, மனிதகுல ஒற்றுமை மற்றும் நமது உள்ளங்களை இணைத்திடும் விஷயங்களைக் கொண்டாடும் படைப்பாற்றல் மிக்க காட்சியகம்

(நன்றி, http://www.bahai.org)

 

அனைத்துலக சமூக அறிக்கைகள்

 

முக்கியமான வேறு சிலர்

 

பிற கட்டுரைகள்

 

monasdream{மோனாவின் கணவு}இத்திரைப்படம் மோனா, அவரது தந்தை மற்றும் அவரோடு தியாகமரணமுற்ற வேறு பல பஹாய்களின் கதையை விவரிக்கும்.. 2008 அக்டோபர் மாதம் படிப்பிடிப்பு துவங்கப்பட்டு 2009 ஏப்ரல் மாதத்திற்குள் படிப்பிடிப்பு முடிவடையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. விவரங்களுக்கு: http://www.monasdream.com

 

 

 

 

radionur

இது 24 மணி நேர பஹாய் இணைய வானொலி. இங்கு பன்மொழிகளில் பாடல்களையும் நிகழ்ச்சிகளையும் செவிமடுக்கலாம். வானொலியை உங்கள் கணிணியின் வாயிலாக செவிமடுக்க பின்வரும் இணையபக்கத்திற்கு செல்லவும். http://www.radionur.com