|
பாஹிய்யா
ஃகானும்

அவர்
பஹாவுல்லா
மற்றும்
ஆசிய்யா
ஃகானும் தம்பதியரின் புதல்வியும்,
அப்துல் பஹாவின் சகோதரியும்
ஆவார். பஹாவுல்லாவின் சமய நம்பிக்கையாளர்களிடையே ‘அதிப்புனித இலை’ என
வழங்கவும் போற்றவும் பெற்றிருந்தவர். அவரைச் சுற்றியிருந்தோருக்கு அவர்
‘ஃகானும்’,
அதாவது ‘பெருமாட்டி’.
இந்தப் பெண்மணி,
‘ஃகானும்’ அவர்கள்,
தம்மை அறிந்து அன்பு கொண்ட எல்லோருடைய
மனதிலும் ஊடுருவும் புத்துணர்ச்சியளிக்கவல்ல வகையில் வாழ்கிறார் - நாள்
முழுவதும் ஃகானும் கடப்பாட்டுடனும்,
இங்கிதம் மிக்க மனதுடனும்,
சிறப்பை பிரதிபலிக்கும் வகையில் அன்றாட
அத்தியாவசியங்களை எளிமையாகப் பகிர்ந்து,
தமது தினசரி ஜீவ
உணவாக விளங்கிய அவற்றை நாமும் நமது பங்கிற்கு எடுத்துச்
சென்று பிறருடன் பகிர்ந்துகொள்ளவும் வழிவகுப்பார்.
தனிப்பாங்கு
மற்றும் வழிவகைகளை உள்ளடக்கிய அவருடைய இனிய சுபாவத்தைப் பற்றி
சிந்திக்கையில்: தமது விருந்தினர்களோடு உங்களை அவர் வரவேற்கும்
விதம்,
வசீகரம் கலந்த
திடகாத்திரம்,
எச்சரிக்கையுடனும்,
கட்டுப்பாட்டுடனும்,
அதே வேளையில் இலகுவாகவும்,
அன்னியோன்னியம் இல்லாமலேயே எல்லோரையும் மகிழ்வடையச்
செய்வதில், -
மென்மை கலந்த பெருந்தன்மை
மற்றும் சுயநலம் பாராத ஒரு மேன்மை மிகு பெண்மனியாகத் திகழ்வார். அரச குல
மாதர்களின் மனோபாவத்தை அவர் பிரதிபலித்ததானது,
முன்னாள் பாரசீக நாட்டின் ராஜசபையை
நினைவூட்டியது. தமது குடும்பத்தினருடன் அந்நாளைய சில சம்பிரதாயங்களை அவர்
கடைபிடித்தே வந்தார். அவை, அவருக்கு உயிரற்ற செயல்களாக இல்லாமல்,
ஜீவனுள்ள நடைமுறைகளாகவே விளங்கின;
வெளித்தோற்றம் மற்றும் நடப்பு நாகரீகம்
இரண்டையும் கடந்த,
சக மனிதர்
ஒவ்வொருக்கும் உள்ளுறைந்த மரியாதை மற்றும்
அக்கரையை வெளிப்படுத்தும் மென்மையான மனித உறவுக் கோட்பாடுகளாக அவை
ஃகானும்
அவர்களுக்கு விளங்கின.

உயர்குடி
மற்றும் மேல்வர்க்கத்தைச் சார்ந்த
ஃகானும் போன்ற பெண்மணிகளை முடக்கிவைக்கும்
கிழக்கத்திய
கட்டுப்பாடுகளை,
ஒருவர் அடைமழையின் காரணமாக வீட்டிற்குள் முடங்கிக்
கிடப்பது போல் ஏற்றுக்கொண்டுள்ளதையும்,
வாழ்க்கையை அந்தக் கட்டுப்பாட்டிற்குள்
வார்த்து,
தமது ஆன்ம சக்திகளை அங்கு
வெளிப்படுத்தி,
தமது உயர் பண்புகள்
பிரதிபலிக்கப்படும் அரங்கமாகவும் அதை ஆக்கிக்கொண்டிருப்பதைக் காணலாம்.
வீட்டிற்குள் அமைதிச் சூழ்நிலை மற்றும் உயர்கடப்பாடுகளை உருவாக்க
வெளிப்படுத்திய அவருடைய கவனம்,
மென்மைத்தன்மை கலந்த ஆரோக்கியம் மற்றும்
நல்வாழ்க்கைக்காண கூறுகள் யாவற்றையும் அவர் சுமுகத்துடன்
ஐக்கியப்படுத்தினார். அவர் உறுதிமனப்பான்மை எவரையும் அடக்க
முயன்றதில்லை,
அவர் முடிவான எண்ணங்கள்
யார் மேலும் சுமத்தப்பட்டதில்லை. அவர் வழி மென்மையான வழி. ஓட்டை பிறர் ஒரே
அடியில் நொறுக்கும்போது, ஃகானும் அவர்கள் அளவுகடந்த கவனத்துடனும்
திறனுடனும் ஓட்டின் உள்ளிருப்பதை வெளிக்கொணருவார். அவர் போக்கில்
வற்புறுத்தலையோ சாதிக்க நினைக்கும்
மனோபாவத்தையோ காணமுடியாது: எவர் மனதிலும்
சுமையை ஏற்றமாட்டார்,
தமது விருப்பத்தையும் பிறர் மேல் நிச்சயமாக சுமத்த
நினைக்கமாட்டார். மெல்லிய புன்னகையுடனேயே அழைப்பு வரும்.
ஃகானும் அவர்களின்
ஆதிக்கம் யாருமே உணராத நிலையில்
செயல்படும். ஆக்கம் நிறைந்த அவரது அனுதாபம் தம்மைச் சுற்றியுள்ளோரின்
வாழ்க்கை அங்கங்களில்,
மிருதுவான அக்கரையாக வெளிப்பட்டு,
கவலை தோய்ந்த நேரங்களில் அவர்களை இன்பத்தால்
நிரப்பும். அந்த நேரத்தில், இந்த அனுதாபத்தை அனுதாபமாகக் காணாமல்,
களிப்புடனேயே யாவரும் அதை அனுபவிப்பார்கள்.
பரிசுகள் வழங்கும்போது அவற்றை ஒரு மெல்லிய பட்டுத்துணியில் சுற்றி வழங்குவது
பாரசீக வழக்கம். அதாவது, உள்ளிருக்கும் பண்பட்ட பரிசை குறிக்க வெளியே
மென்பட்டுத் துணி போர்த்தப்பட்டு
இருக்கும். இதைப்போலவே
ஃகானும் அவர்களும் பரிசுக்குள் பரிசு வழங்குவார். அவர் அருகாமையில் இருக்கும்
போது அடையும் இதமான மனநிறைவை,
அவரைப் பிரியும் போது கூடவே ஈர்த்துச் செல்வோம்.
ஆனால் இந்த மனநிறைவு ஒரு மிகுந்த களிப்பை,
ஆழ்ந்த மனோநிலையை அடக்கியிருக்கும் ஒரு பரிசுப்
பொட்டலம் என்பது பிறகே தெரிய வரும். குறையாமல் வெளிப்பட்ட இந்த இரட்டை
ஆசியினைக் கண்ணுற,
ஃகாணும்
அவர்களோடு நாங்கள் ஆக்கோ நகரில் இருந்தபோது வாய்ப்பு கிட்டியது. பிற குடும்ப அங்கத்தினர்கள் ஒரு
திருமண வைபவத்திற்கான வேலைகளில் ஈடுபட்டிருந்தபோது, ஃகானும் அவர்கள் ஜுரத்தால்
பீடிக்கப்பட்டிருந்தார். திருமண சடங்கிற்குச் சற்று முன்பாக
ஃகானும்
அவர்கள்,
அப்பொழுதுதான் குழந்தைப்
பருவத்தைத் தாண்டிய வயதினளோ என்று நினைக்கப்படக்கூடிய மணப்பெண்னை,
வரச்சொல்லியனுப்பினார். நீர் தோய்ந்த கண்களுடனும்
நடுங்கிய தேகமுமாக அந்தப் பெண் வந்தாள். சிறிய புன்னகையை
உதிர்த்து,
வெள்ளை நிறத்திலான திருமண
உடை,
முகத்திரை,
தலையில் மேல்நாட்டு முறையில் அலங்காரமாக
வைக்கப்பட்டிருந்த ஆரஞ்சு நிற பூக்கள் ஆகியவற்றை
ஃகானும் அவர்கள் மெல்லத்
தொட்டு,
மென்மையான
குரலில்,
“எவ்வளவு அழகாக உள்ளன,” என கூறினார். அந்த ஒரு அங்கீகார வார்த்தையில்
மணப்பெண் தனது பயம் அனைத்தையும் மறந்து,
திருமண வைபவத்திற்குத் தன்னால் புரிந்துகொள்ளப்பட
முடியாத ஓர் ஆசீர்வாதத்துடன் சென்றாள்.
பாரசீகரிடையே,
ஒரு தாய் தன் குழந்தையை கண்டிக்கும்போதோ அல்லது
ஆறுதல் கூறும் போதோ ‘அம்மா’ என்று அழைப்பது வழக்கம். இந்த வாஞ்சை நிறைந்த
சொல்லை
ஃகானும் அவர்கள் தமக்கு நெருங்கியவர்கள் மற்றும் தம்மைச் சுற்றியுள்ள
அனைவர்பாலும் உபயோகிப்பார். ‘மாடர் அய்ப் நடாரட்,’
‘பரவாயில்லை அம்மா பரவாயில்லை’ எனும் மெல்லிய தொனியிலான வார்த்தைகளின்
ஆறுதல் அளிக்கும் எதிரொலி சதா கேட்டுக் கொண்டே இருக்கும். ஒவ்வொருவருக்கும்
அவர் ஆறுதலளிப்பவராய் விளங்கினார். ஆனால் அவரைத் தாய் போன்றவர் என்று
சொல்லுவதில் மனம் நிறைவு பெறாது. தாயைப் போன்றவர் என்பது ஒரு
வரம்பிற்குட்பட்ட வார்த்தை. தாயன்பு மெல்ல அரவனைத்து தான் அன்பு செலுத்துவோரை
தனது பிடியிற் கொள்ளும்;
ஆதிக்கம் அதில் அடங்கியிருக்கின்றது. பிரதி
அன்பையும் அது எதிர்பார்க்கின்றது.
ஃகானும் அவர்களின் வாஞ்சை இதையெல்லாம்
கடந்தது. ஃகானும் அவர்களின் அன்புக்குப் பாத்திரமானவர்களின் இதயம் மற்றும்
உடல் இரண்டும் பெரும் சுதந்திரத்துடன் இருக்கும். அன்புக்கடன்
பட்டுள்ளோமே,
என்ற எண்ணம் எவருக்குமே
இல்லாமல் செய்துவிடுவார்.
ஃகானும் இவ்வளவு அன்பாக இருக்கின்றாரே,
என்ற எண்ணம்கூட அவர்கள் மனதில் தோன்றா வண்ணம்
ஃகானும் அவர்களின் அன்பு அவ்வளவு இயற்கையானதாக இருக்கும். அவர் தொடுவது
தெரியாமல் தொட்டு நன்றிக்கடன் மற்றும் பொறுப்புணர்வுகள் எதுவும் எழாமல்
செய்துவிடுவார். அவர் ஆறுதலில் பஞ்சின் மென்மை இருக்கும்: காரணம்,
மனம் பெரிதும் புண்பட்டிருக்கும் வேலையில்
தயையின் அழுத்தம்கூட மனதை மேலும் காயப்படுத்திவிடும் என்பதே. தைலம்
தடவிவிடுவார் ஆனால் அவரது விரல்களின் கணம் தெரியாது;
அதனால் நிவாரணமும் ஆறுதலும் மாயப் பரிசுகளாக
கிடைக்கும். அந்த நேரத்தில்
அது எங்கிருந்து வந்தது என்றும் தெரியாது தெரிந்துகொள்ளவும் முயற்சி
இருக்காது. அந்தப் பரிசினை மகிழ்வுடன் பகிர்ந்துகொள்ளுவதில் நன்றியுணர்ச்சி கரைபுரண்டோடும்.
அவர் நம்மை
அளந்துபார்த்து அதற்கேற்றவாறு வழங்கமாட்டார்;
அல்லது வலி தானாக ஏற்படுத்திக்கொண்டதா
அல்லவா,
என்றெல்லாம்
பார்க்கமாட்டார். துன்பத்திற்கு இயற்கையாகவே ஒரு புனிதத்தன்மை உள்ளது என்பதை அவர்
தெரிந்துவைத்திருந்தார். அவர் எப்போதும் நீதிபதியாக வீற்றிருந்தது
இல்லை,
ஆடுகளையும் ஓநாய்களையும்
பிரித்துப்பார்க்க நினைத்ததும் இல்லை. மந்தையில் உள்ள ஆடுகளை வெள்ளை என்றோ
கருப்பு என்றோ அவர் பார்த்ததில்லை,
ஒருவர் உள்ளத்தில் இருந்து கிளம்பும் நல்ல எண்ணங்களை நல்ல எண்ணங்கள்
என்றோ கெட்டவைகளை துர்எண்ணங்கள் என்றோ அவர் கூறியதில்லை. குறைகளை
சுட்டிக்காட்டும் பழக்கமோ கண்டிப்போ அவரிடம் கிடையாது. இருள் சூழ்ந்த மனதுடன்
சென்றால் அதில் அவர் விளக்கேற்றிவைப்பார்;
தவறிழைத்துவிட்டாலோ அல்லது முயலாமல்
இருந்துவிட்டாலோ அல்லது முயற்சியில் தோல்வி அடைந்துவிட்டோலோ,
அந்த தோல்வியினால் நாம் அடைந்த ஏமாற்றத்தை
அறிந்து நம்மேல் அதிக அன்பே நல்குவார்;
நமது பலவீனம் மற்றும் தோல்விகளின்பால்
பரிவும்,
அப்படியே முயற்சியின்போது
துன்பம் ஏதும் அனுபவிக்காதவர்பாலும்,
தோல்வியில் அவமானப்படாதவர்பாலும் தயையே
கொள்வார்.
யாராவது
ஒருவர் அவரை துன்புறுத்த நினைத்தால்,
அப்படிச் செய்ய நினைப்பவரின் மனதில் அவ்வித
கொடுமை உணர்ச்சி தோன்றியதற்காக அந்த மனிதருக்கே ஆறுதல்
வார்த்தைகள்
ஃகானும்
கூற நினைப்பார் என நிச்சயமாக நம்பலாம். அவர் அன்பு விதிமுறைகளுக்கு
உட்பட்டதல்ல. அது முகத்திரையைக் கிழித்து அந்தச் சினத் திரையின் பின்னால்
கிடக்கும் ஆன்மீகப் பசியை உணர்ந்து கொள்ளும். மிகக் கொடுமைக்கார உள்ளமே
ஆனாலும் அது பிறரிடம் மென்மையைத்தான் எதிர்பார்க்கின்றது என்பதை அவர்
உணர்ந்து வைத்திருந்தார். அவரிடம் அந்த அபூர்வமான மனோசக்தி, எந்தச் சூழ்நிலையிலும் வாஞ்சையையே
வெளிப்படுத்தும் இயல்பு இருந்தது. அவர் புறிந்துணர்வின் ஆழம்,
மனித இதயங்களின் துயரங்கள் அனைத்தையும் ஊடுருவி
அவற்றின் காரணங்களை கண்டறிந்து,
அதன்மூலமாக அந்தத் துன்பமும்,
துன்பம் கொண்டோரும் ஆசி பெறவும் செய்தது.
எல்லா
தயைகளுக்கும் தோற்றுவாயை நன்கு அறிந்துவைத்திருந்த அவர்,
தம்பாலான தயைகளை தெரிந்துகொள்ளவில்லை. அவர்
ஒருவருக்கு ஒரு பரிசு கொடுக்கும் போது,
அந்தப் பரிசுக்காக பரிசு வழங்கப்பட இருப்போரிடம்
நன்றி தெரிவிப்பதைப்போல் இருக்கும். கொடுக்கவேண்டும் என்ற உணர்ச்சி நன்றி
உணர்வுடனேயே அவரிடம் பிறக்கும். நமக்கு அன்பை வழங்கும்போதும் அந்த
வாய்ப்பிற்காக நன்றி செலுத்துவார். கொடுப்பதற்கும் பெறுவதற்கும் அவர்
வேறுபாடு காணவில்லை போலும். இது பின்வரும் சம்பவம் மூலம் தெரியவரும்.
தம்முடைய உலக வாழ்வின் கடைசி வருடத்தின் போது ஒரு நாள்,
தமது குடும்பத்தாரின் குழந்தைகளுடன் மலைக்கு
சென்றிருந்தபோது,
அங்கு உட்கார்ந்து
குழந்தைகளையும் நிகழ்ச்சியையும் கவனித்துக்கொண்டிருந்தார். அன்று
ஃகானும்
அவர்கள் தங்களுடன் இருந்தது,
குழந்தைகளுக்கு ஒரு திருவிழா போல் மகிழ்ச்சியாக
இருந்தது. தாம் சதா வெளிப்படுத்தும் களிப்பை அங்கும் அன்று அவர்
பகிர்ந்துகொண்டார்... ஆனால் அன்று மாலை வீடு திரும்பிய பிறகு,
அன்று கேளிக்கைகளில் தாம் பெற்ற
இன்பத்திற்காகவும்,
குழந்தைகளின் மகிழ்சியினால் தாம் பெற்ற
மகிழ்ச்சிக்காகவும் எல்லோருக்கும்
அவர் நன்றி செலுத்தினார்!
தமக்குள்
பிரகாசித்த பாசத்துடனான அன்புணர்வை அவர் உணர்ந்திருக்கவில்லை,
ஆனால் இதே உணர்வை பிறரிடம் காணும்போது மிகுந்த
நெகிழ்ச்சி கொள்வார். அவருக்குச் சேவை செய்வதை கடமையாகக் கொள்ளமுடியாது: அது
ஒரு கிடைத்தற்கறிய பாக்கியம். இருந்தபோதிலும் அவர் எதையும்
எதிர்பார்க்கவில்லை,
தம்முடைய கடைசி மூச்சு உள்ளவரையிலும் தமக்காக
பிறர் செய்யும் எந்த சிறு உதவிக்கும் சேவைக்கும் ஒரு புன்னகை மூலமாகவோ ஒரு
வார்த்தை மூலமாகவோ நன்றி தெரிவிக்கத் தவறியதில்லை.
பரோபகாரம் என்பது அவர்
சிந்தித்து செயல்படுத்தும் ஒன்று அல்ல,
அது அவரது இயற்கை. ஒரு காரியத்திற்கான
தூண்டுதலுக்கும் அதனை அவர் செயல்படுத்துவதற்கும் இடையே எந்த சிறு தாமதமும்
அவரிடம் காணமுடியாது. அவரது வெளிப்படையான போக்கு,
அவருக்குள் பாயும்,
என்றும் தவறாத,
தொடர்ச்சியான அன்பின் உந்துதலே என்பதை உணரலாம்.
குழந்தைகளுக்கு இனிப்புப் பண்டங்கள்,
தின்பண்டங்கள்,
மற்றும் பணம் வழங்குவதிலும் மற்றவர்களுக்கு
மலர்கள்,
கைப்பொருள்கள்,
ரோஜா அத்தர்,
ஒரு ஜபமாலை,
அல்லது தாம் மிகவும் விரும்பி வைத்திருந்த பொருள்
எதையாவது பரிசாக வழங்குவதில்
அவர் மிகுந்த மகிழ்ச்சி அடைவார். தாம் பெற்றவற்றை என்றாவது ஒரு நாள் அது
தேவைப்படும் பிறருக்கு,
ஒரு விசேஷ சலுகை தேவைப்படும் ஒருவருக்கு
வழங்கிவிடுவார். அவர் ஒரு கொள்கலன் அல்ல,
வாய்க்கால்;
மூடிய இருப்புப் பெட்டியல்ல, .திறந்து கிடக்கும்
போக்கிஷம்.
அதே சமயம்
தம்முடைய சிறு சிறு பொக்கிஷங்களை அவர் பூட்டிவைத்துக்கொள்ளவில்லை,
அதே போல் தம்முடைய விவேகம் மற்றும் வாழ்க்கையின்
பெரும் அனுபவங்களையும் மறைத்ததில்லை. அவரது வாழ்வில்,
கடந்தகால அனுபவங்கள் எந்த ஒரு
வெறுப்புணர்ச்சியையும் விட்டுச் சென்றதில்லை. அவர் வெளிப்படுத்தியக்
கனல்,
வாழ்வின் அனைத்தையும்
சுவர்ணமாக மாற்றியது. இந்தச் சுவர்ணத்தையே அவர் பகிர்ந்துகொண்டார். அவர்
விவேகம் இதயத்தோண்றலாய் விளங்கியது. அவர் இந்த விவேகத்தை ஒரு கோட்பாடாகவோ
அடிக்கோளாகவோ மட்டப்படுத்திக் கொண்டதில்லை. சுவற்றில் தொங்கவிடக்கூடிய
அளவிற்கு அவர் எந்த விவேக வார்த்தைகளையும் கூறியதில்லை. ஆனால் அவர் அவராக
இருந்தபடி தமக்குத் தெரிந்த அனைத்தையும் வழங்கினார். மனித நாவால் கூற முடியாத
ஆயிரம் விஷயங்களை அவர் ஒரு புன்னகையாலும்,
ஒரு பார்வையாலும்,
அல்லது மென்மையான மௌனத்தின் மூலமுமாகவும்
வெளிப்படுத்தினார்.
பலர்
பேசிக்கொண்டு இருக்கும் இடத்தில் அவர் மௌனமாக இருப்பதுண்டு,
மௌனமாக இருந்த போதிலும் அங்கு அவர்
ஒதுங்கியிருப்பதில்லை. வாய்தான் மூடியிருக்குமே ஒழிய ஆவி அங்கு
அலவலாவிக்கொண்டிருக்கும். அவர் மௌனம்,
அப்படி இருந்திடவேண்டும் என்று
தீர்மாணிக்கப்பட்டதும் அல்ல,
சூன்யமானதும் அல்ல. அது அவரைப்போல் மற்றவரையும்
மௌனமுறச் செய்யக்கூடிய ஒன்றும் அல்ல,
மாறாக,
மற்றவர் குரல் ஒலியோடு தானும் கலந்து இசை
சேர்க்கும் அவரது ஆன்ம ஒலி அது. எவ்வளவு ஆழ்ந்த சாந்தம் கொண்டவராக இருந்தாரோ
அந்த அளவுக்கு யாவற்றிலும் ஈடுபாடு கொண்டவர். களிப்புணர்ச்சி
மிகுந்தவர்,
தம்மைச் சூழ்ந்திருக்கும்
இளையவர் கேளிக்கைகளில் தாமும் மகிழ்வார். இந்த களிப்புணர்வுகள் அவரது ஆழ்ந்த
சாந்தக் கடலின் சந்தோஷ அலைகள்.
அபூர்வமாகவே
தனித்திருப்பார். தனிமையில் ஒருமையும் சாந்தியும் காண்பர் பிறர்,
ஆனால்
ஃகானும் அவர்களோ பிறர் சகவாசத்தில்
அவற்றைக் கண்டும் பேணியும் வளர்த்தார். வாழ்வின்பால் அவர் போக்கு பிரார்த்தனை
உணர்வாய் வெளிப்பட்டது. அவரது எண்ணங்கள் பனிந்த எண்ணங்கள். பிறருடன்
தொடர்பை அவர்களுடன் ஒன்றுகலந்த
அமைதியில் பெற்றார்,
குழந்தைகள் நிறைந்த,
ஒளி சூழ்ந்த அறையில் தனிமையும் கண்டார். அவரது
பிரத்தியேக அறை அவ்வீட்டின் இதயமாய் விளங்கியது. குளிர் காலத்தில் அவருடைய
குளிர் போக்கும் சூட்டடுப்பின் ஜுவாலையின் அருகிலோ அல்லது சூரிய ஒளியில்
சன்னல் அருகே மஞ்சத்தில் அவர் அமர்ந்திருக்கும் போதோ,
சிறியோரும் பெரியோருமாக ஒருவர் ஒருவராக அவரைச்
சூழ்ந்தும் பிறகு ஒருவர் ஒருவராக தத்தம் வேளைகளுக்கோ விளையாடவோ செல்வர்
அல்லது ஃகானுமை அவரது அறை வாசலில் நின்று ஒரிரு வினாடிகள் தரிசித்தோ செல்வர்.
அவர் அறைக்கு வெளியே நாமும்,
காலனிகளை கலற்றி வைப்பதோடு பொருளற்ற வெளியுலகக்
கலாச்சாரம் அனைத்தையும் கலற்றிவைத்தே அவர் முன்னிலை செல்வோம். அவரது
உலகத்தில்,
அந்த அறையில்,
நடிப்பிற்கும் சம்பிரதாயங்களுக்கும் இடமில்லை:
அவர் ஒளிமிகுந்த எளிமையின் முன் நாமும் எளிமை பெறுவோம். அங்கு சகல
பீதி,
கூச்சம்,
பயசுபாவம் அனைத்தும் மறைந்துவிடும். நாம்
உணராமலேயே நமது உணர்ச்சியின்மையை குறைப்பார்,
சிரத்தையின்மையை அகற்றுவார். இவர் எவ்வளவு
நல்லவர்,
நான் அப்படி அல்லவே
என்றெல்லாம் நினைக்க மாட்டோம். அங்கு ‘நான்’ எனும் எண்ணம் தற்காலிகமாக மறந்து
போய், அந்த மறதியில் பிறருடன் நம்மை ஒப்பிட்டுப் பார்க்கும் எண்ணம் காணமற்
போய்விடும். அகந்தையின் உயிர் ஓட்டம் வெட்டுண்டுபோகும். நாம் பற்றற்ற
பறவைகளாவோம்.
பரந்த அந்த
வீட்டின் தலைவியாகவும்,
அதன் தனி விவகாரங்கள் ஒவ்வொன்றையும்
நிர்வகிப்பவராகவும் பல வருஷங்கள் அவர் இருந்த போதிலும்,
தலைவி என்ற முறையில் எதையும் மேலோட்டமாக
செய்தாரில்லை. ஏதாவது செய்யப்பட வேண்டுமானால்,
அதை உடனடியாகவும்,
முழுமையாகவும் செய்து முடிப்பார். கைகட்டி
உட்கார்திருந்தாலும்,
அவர் அங்கு முழுமையாக வீற்றிருப்பார். அவர் மனது
அடுத்து வேறு என்ன செய்வோம் எனும் எண்ணத்தில் மூழ்கியிருக்காது. வாழ்வுடனான
ஐக்கியத்திற்கென்று,
பிறருடன் இருக்கும் நேரத்தில் தம்மை முழுமையாக
அர்ப்பணித்து,
அந்த விநாடிகளை
முழுமைப்படுத்தவும் செய்தார். அந்த விநாடிகள்,
காலத் தீவுகள்.
அவர்
வாழ்வுடனும் அதை தமக்காக நிர்வகிப்போருடனும் மட்டுமே
ஐக்கியப்பட்டிருக்கவில்லை,
தமக்குள்ளும் அவர் சொல் வேறு செயல் வேறு
என்றோ,
வேறுபட்டோ இருக்கவில்லை. அவர் ஒரு செயலில்
இறங்கும் முன்பாக,
தொடர்ந்து இதைச் செய்யலாமா
வேண்டாமா என்பதை குறிக்கும் மனமாற்றத்தை அறிவிக்கும் தாமதமோ,
அல்லது அச்செயலின் தூய்மையை அபகரிக்கும் தயக்கத்தின் முனுமுனுப்போ
இருக்காது. அவரது சுபாவம் அவர்தம் ஆவியுடன் இரண்டறக் கலந்து,
தூய்மையும் நேர்மையும் அவரது இயற்கை குனங்களாக
விளங்கி,
யாவற்றிலும் தூய்மையைக் கண்டுணர்ந்து தேர்வு
செய்யும் பழக்கம்,
ஒரு தூண்டுதலும் தேவைப்படாத
இயற்கை குணமாகவும் விளங்கியது. அப்பாவி என்பதைவிட,
பாவங்கள் தம்மை அனுகவிடாமல் தடுக்கும்
ஒருவரவர்,
ஏனென்றால் அவர் பாவத்தின்
பல்வேறு உருவங்களை நன்கு கண்டுகொண்டு,
பயமின்றி அவற்றை எதிர்நோக்குவார். வாழ்க்கையின்
எல்லா அங்கங்களையும் பரந்த உள்ளத்துடனேயே ஏற்றார்,
அவற்றை என்றுமே சுமையாகக் கொண்டது
கிடையாது,
அவரது போக்கில்
தப்பெண்ணங்களின் நிழல்கூட பட்டது கிடையாது. அவரிடம் குற்றம் காணப்
புறப்பட்டால்,
அங்கு அபூர்வ பன்புகளின்
மனிதப் பிரதிபலிப்பையே கண்டும்,
இந்த சுபாவங்கள் அவரை நம்மோடு புறிந்துணர்வின்
அடிப்படையில் இனைத்தும்,
ஆச்சர்யம் விலகி ஒரு சேவித உணர்வே மிஞ்சவும்
செய்யும்.
உலக
ரீதியில்,
அவர் கற்றுணர்ந்தவர் என்றோ
அல்லது கற்பிக்கப்பட்டவர் என்றோ கூற இயலாது: அவர் தமது விவேகத்தை மறைந்துள்ள
அறிவூற்றுகளிலிருந்து ஈர்த்தார். அவரது பகுத்தறிவு அவருடைய இதய உதயமாக
விளங்கினாலும்,
அந்த இதயம்,
மனித ஞானத்திற்கு அப்பாற்பட்ட ஆழமான மூல
விஷயங்களைக் கொண்டு நிறைந்திருந்தது. அவர் அதிகமாக படித்தாரில்லை,
எழுதினாருமில்லை,
ஆனால் உயிர்களுடனான தொடர்பை சர்வ காலமும்
கொண்டிருந்தார். ஒவ்வொரு பொருளும் அவருக்கு ஒரு முக்கியத்துவம் வாய்ந்தாகவே
இருக்கக் காண்போம்;
இயற்கையின் எல்லா அங்கங்களும் எல்லா
பொருள்களும்,
ஜீவனுடனோ அல்லது
ஜீவனற்றோ,
செய்தி ஒன்றை படிப்பதற்கு
அட்சரங்களாகவும்,
உயிர் மற்றும் மெய்
எழுத்துக்களாவும் அவருக்கு விளங்கின என மனம் எண்ணவே செய்யும். அதிலிருந்து
அவர் பெற்றவைகளை வாழ்க்கை முறைகளாக அவர் செயல் படுத்தினார். அவர் விளக்கம்
சொல்லியதுமில்லை,
போதித்ததுமில்லை: நம்மை
வாக்கு வண்மையினாலோ அல்லது புத்திசாதுர்யத்தினாலோ அவர் வென்றதில்லை:
வற்புருத்தலுக்கோ,
கவரும் முயற்சிக்கோ அவர்
தம்மை ஈடுபடுத்தியது கிடையாது. நமது உடனடித் தேவையை நிவர்த்தி
செய்யும் ஆவியின் ரசாயனக் கலப்பினால் உருவான ஒரு ரகசியத்தை,
ஆழத்திற்கு ஆழம்,
அவர் நம்மோடு பகிர்ந்துகொள்வார்.
மனம்
கலக்கமடைந்திருக்க நம்மைக் கண்டால்,
நமது இன்னல்களை கேட்டறியவோ அல்லது அவற்றை
தீர்க்கவோ முனையமாட் |