|
வெண்பட்டாடை
தாஹிரியின் மரணம் தெஹரானுக்கு மத்தியில் ஒரிடத்தில், ஒரு தோட்டத்தின் கிணற்றுக்குள், பாறாங் கற்களின் கீழ் அந்த உடல் சிதைந்து கிடக்கின் றது.அந்த கிணற்றைச் சுற்றி உயர்ந்த கட்டிடங்கள் வானளாவுகின்றன. அந்த தோட்டம் இருந்த இடத்திற்கு அருகே உள்ள சாலையில் நிறைய வாகனங்கள் வந்துபோய் கொண்டுள்ளன, பொதி சுமக்கும் கழுதைகளை பேருந்துகள் ஓரமாக ஒதுக்கித் தள்ள, உலகின் பல பாகங்களையும் சார்ந்த வாகனங்கள் ஒட்டகங்கள் சுமக்கும் சுமைகளை உரசிச் செல்கின்றன, வண்டிகள் ஆடியவாறு நகர்ந்து கொண்டிருக்கின்றன. சூரிய அஸ்தமனத்தின் போது, அருகில் உள்ள ஓர் ஓடையில் இருந்து சிலர் நீரை வாரி சாலையின் மீது இரைத்து தூசுப்படலம் எழுவதை தடுக்க முயல்கின்றனர். அந்த உடல், மண்ணோடு மண்ணாக சிதைக்கப்பட்டு அங்குதான் கிடக்கின்றது. அது மறைக்கப்பட்டுவிட்டது, மறக்கப்பட்டு விட்டது என நினைத்து மனிதர்கள் வரவும் போகவும் செய்கின்றனர்.
பெண்களின் அழகு என்பது காலம் சூல்நிலை ஆகியவற்றை சார்ந்த ஒன்றாகும்.
உதாரணமாக,
லைலியை எடுத்துக்கொள்வோம். அவள் அவளது காதலன் மஜ்னூனை விட்டு பிரிந்த போது
அவளது பிரிவை தாளமாட்டாமல் மஜ்னூன் பாலைவனத்தைத் நாடிச் சென்றான்,
ஏனென்றால் லைலியின் முகத்தை தவிர பிற மனிதர்களின் முகங்களை அவனால்
பார்க்கமுடியவில்லை. பாலவன த்தின் மிருகங்களே அவனைச் சுற்றி உட்கார்ந்து
அவனுடைய துக்கத்தில் பங்கு கொண்டன. ஆனால்,
இத்தனைக்கும் லைலி அழகானவளே அல்ல. எத்துனை கவிஞர்கள் அல்லது
சித்திரக்காரர்கள் வேண்டுமானாலும் இதற்கு சாட்சியம் கூறுவர். அராபிய
நாடுகளைச் சேர்ந்த மன்னன் ஒருவன் மஜ்னூனின் காதலில் தலையிட்டு அவனது மனதை
மாற்றிட வீன் முயற்சிகள் எவ்வளவோ செய்து பார்த்தான். அந்த காதல்
விவகாரத்தால் ஏற்பட்ட அத்தனை அழிவுகளுக்கும் மூல காரணமாக விளங்கிய அந்த
லைலியின் முகம்தான் எத்தகையது என்பதைக் காண வேண்டுமென அந்த மன்னனின்
உள்ளத்தில் ஓர் எண்ணமும் உதிக்கச் செய்தது. காவலர்கள் அராபிய இனங்கள்
ஒவ்வொன்றிலும் அவளை தேடி,
கண்டுபிடித்து,
அரண்மனை முற்றத்தில் அந்த மன்னனின் முன்னிலையில் அவளை கொண்டு வந்து
நிறுத்தினர். அரசன் அவளை பார்த்தான்;
மெலிந்த தேகமுடைய கரு நிறத்தாள் ஒருத்தியையே அவன் கண்டான். அவனது
அந்தப்புரத்தில் சேவையாற்றிடும் மிகத்தாழ்ந்த பணிப்பெண்கள் கூட நிறத்தில்
அவளை மிஞ்சியிருந்த நிலையில்,
அவளைப் பற்றி மனதில் பெரிதாக நினைத்திட எதுவுமில்லாமல் இருந்தான் அந்த
மன்னன். மஜ்னூன் மன்னன் மனதில் தோன்றிய சிந்தனையை புறிந்து கொண்டு,
‘அரசே,
நீர் மஜ்னூனின் கண்களைக் கொண்டு லைலியின் உள் அழகு வெளிப்படுத்தப்படும்
வகையில் அவளை ‘உதட்டின் ஓரத்தில் ஒரு சிறிய கருப்பு மச்சம் கண்ணங்கள் இரண்டிலும் ஒவ்வொன்றாக கரு நிற கேசச் சுருள்’ என அவர் எழுதிய போது; காகிதத்தின் மீது நாணல் எழுத்தானி கிரீச்சிட்டிருக்கலாம்.தாஹிரிஃ அழகான உடைகளையும் வாசனை திரவியங்களையும் மிகவும் விரும்புவார். நன்கு சாப்பிடவும் விரும்புவார். நாள் முழுவதும் இனிப்புப் பண்டங்கள் உண்ணக்கூடியவர். ஒரு முறை, தாஹிரிஃ மறைந்து பல வருடங்கள் ஆன பிறகு, ஆக்காவிற்கு வருகை தந்திருந்த அமெரிக்கப் பெண்மனி ஒருவர், அப்துல் பஹாவின் விருந்துபசரிப்பு மேஜையில் உட்கார்ந்திருந்தார்; உணவு மிகவும் நன்றாக இருந்தது, அவரும் நிறையவே விரும்பிச் சாப்பிட்டார். ஆனால், பிறகு அவ்வாறு நிறைய உண்டதற்காக அப்துல் பஹாவிடம் மன்னிப்பு கேட்டார். ‘நற்பண்புகளும் மேன்மையும் இறைவன்பால் உண்மையான நம்பிக்கை கொள்வதில் அடங்கி உள்ளனவே அன்றி, கொண்டிருக்கும் பசி பெரிதோ அல்லது சிறிதோ என்பதில் அல்ல...,’ என அவர் அதற்கு மறுமொழி பகன்றார். மேன்மைமிகு தாஹிரிஃ அவர்களுக்கு பசி நன்கு எடுக்கும். அதைப் பற்றி அவரிடம் கேட்கப்பட்ட போது, ‘பாரம்பரியமாக வந்துள்ள புனிதமுறைகளில் விண்ணுலக மக்களின் ஒரு பண்பாக, தொடந்தாற் போல் உணவு உட்கொள்வது இருக்கும்,’ என அவர் பதிலளித்தாராம்.
அவர் சிறிய வயதினராக இருந்த போது,
விளையாடுவதற்கு பதிலாக,
காஃஸ்வின் நகரத்திலேயே பெரும் மத ஆச்சார்யர்களாக இருந்த அவரது தந்தை
மற்றும் மாமா ஆகியோரின் சமய விவாதங்களையே செவிமடுத்துக் கொண்டிருப்பார்.
விரைவில்,
அதன்
தாஹிரிஃ வளர வளர, தமது தந்தையும் மாமாவும் வழங்கிய பாடபயிற்சிகள் எல்லாவற்றிலும் கலந்து கொண்டார்; இருநூறோ முன்னூறோ ஆண்கள் நிறைந்திருந்த ஒரே கூடத்தில், ஆனால் ஒரு திரைக்குப் பின்னால் அவர் உட்கார்ந்து, ஒரு முறைக்கு மேல் பலமுறை அந்த இருவரின் விளக்கங்களை அவர் மறுக்கவும் செய்துள்ளார். கூடிய விரைவில் கர்வம் பிடித்த உலாமாக்கள் கூட அவரது கருத்துக்கள் சிலவற்றை ஏற்க வேண்டிய நிலைக்கு வந்தனர். தாஹிரிஃ தமது மைத்துனர் ஒருவரையே மணந்து குழுந்தைகளும் ஈன்றார். இத்திருமணம், திருமண வைபவத்திற்கு முன்பாக மணமக்கள் இருவரும் ஒருவரை ஒருவர் சந்திக்காத, மணமகன் முகத்திரையற்ற மணமகளை கண நேரமே பார்க்க அனுமதிக்கப்பட்ட, சாதாரண பாரசீக திருமணமாகவே இருந்திருக்க வேண்டும். அந்தக் காலத்தில் காதல் திருமணங்கள் அவமானத்திற்கு உரியவைகளாக கொள்ளப்பட்டிருந்தன. ஆகவே, இத்திருமணம் நடப்பு முறைகளுக்கு ஏற்பவே ஏற்பாடு செய்யப்பட்டிருக்க வேண்டும். இல்லை, இல்லை, யார் மீதாவது மனித அன்பென ஒன்றை அவர் கொண்டிருந்தால், பிற்காலத்தில் அவர் சந்திக்க நேர்ந்த; இறைத்தூதர் முகம்மது அவர்களின் பேரரான இமாம் ஹாசானின் குலத்துதித்த, குஃடுஸாகவே அது இருக்கும் எனவே நாம் நினைக்க விரும்புவோம். மக்கள் குஃடுஸை எளிதில் நேசிப்பர். பார்வையை அவரிடமிருந்து அவர்களால் அகற்றவே முடியாது. ஷிராஸில் அவர் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டு வீதிகளின் வழியாக மூக்கில் தாம்புக் கயிற்றோடு வழிநடத்திச் செல்லப்பட்டபோது, தமது யஜமானரின் சமயத்திற்காக பாரசீக மண்ணில் முதன் முதலில் சித்திரவதைக்குள்ளானவர்களில் இவரும் ஒருவர். பின்னாளில் தபார்ஸி கோட்டையில் அகப்பட்டிருந்தோரை வழிநடத்தியவரும் இவரே, மற்றும் அக்கோட்டை, எதிரிகளின் நம்பிக்கை துரோகத்தினால் வீழ்ந்து, அழிக்கப்பட்டபோது, அவரது சொந்த ஊரான பார்புஃருஷில் அவர் ஜனக்கும்பலின் கைகளில் ஒப்படைக்கப்பட்டார். சங்கிலிகளால் பினைக்கப்படடு, கூட்டங்கள் அவரைத் தாக்க, அவர் சந்தை சதுக்கத்தின் வழியாக இழுத்துச் செல்லப்பட்டார். அவர்கள் அவரது உடையை நாசப்படுத்தி அவரை கத்திகளால் கீறிடவும் செய்து, இறுதியில் அவரது உடலை இரண்டாகப் பிழந்து மீதமிருந்ததை நெருப்பிலும் இட்டனர். குஃடுஸ் திருமணமே செய்துகொள்ளவில்லை. அவரது தாயாரும் பல வருடங்களாக அந்த பொண்னாளினைக் காணும் ஆசையில் வாழ்ந்திருந்தார்; குஃடுஸ் தமது மரணத்தை நோக்கி நடந்து செல்கையில், அவர் தமது தாயாரை நினைத்து, “இப்போது என் அன்னை என்னுடன் இருந்து, தமது கண்களாலேயே என் திருமண வைபவ கொண்டாட்டங்களை கண்ணுற முடிந்தால்!” என உறக்கக் கூவினார்.
ஆக,
தாஹிரிஃ,
காற்றில் அசையும் போது கிண்கிணியென ஒலி தரும் மெலிந்த போப்லார் மரங்கள்
சூழ்ந்ததும்,
சாலைகளின் காவி நிற மண்ணின் ஓரமாக தெளிந்த நீரோடைகள் ஓடுவதுமான,
வெய்யிலில் சுட்ட செங்கற்களை கொண்ட பொன்னிற காஃஸ்வின் ஓரு நாள் இரவு அவர் கனவொன்று கண்டார். இளைஞர் ஒருவர் ஆகாயத்தில் வீற்றிருந்தார்; அவர் கையில் நூல் ஒன்று இருந்தது, அதிலிருந்து அவர் செய்யுட்களை வாசித்துக் கொண்டிருந்தார். தாஹிரிஃ விழித்தெழுந்து தாம் கண்ட அந்த கனவில் கேட்டவை அனைத்தையும் ஞாபகத்தில் வைத்திருக்க அவற்றை ஒரு காகிதத்தில் எழுதி வைத்தார், பிறகு, பாப் அவர்கள் எழுதிய ஒரு விளக்கவுரையில் அதே வரிகளைக் காண, கனவில் தாம் கண்ட அந்த இளைஞர் பாப் அவர்களே அன்றி வேறு யாரும் இலர் என அறிந்து அவரை ஏற்கவும் செய்தார். அவர் உடனடியாக அதைப் பற்றி பொதுவில் பேசிடவும் செய்தார். அவர் தாம் பாப் அவர்களின் சமயத்தை ஏற்றுக் கொண்டுள்ளதை பகிரங்கப்படுத்தினார். அதன் விளைவு பெரும் வசைமாரியே. அவரது கனவர், தந்தை மற்றும் சகோதரர்கள் அனைவரும் அவர் தமது பைத்தியக்கார செய்கையை கைவிடுமாறு கெஞ்சினார்; அதற்கு மறுமொழியாக, அவர் தமது நம்பிக்கையை பிரகடணப்படுத்தினார். தமது தலைமுறை, தமது மக்களின் வாழ்க்கை முறை, பலதாரங்கள் கொள்ளும் முறை, பெண்கள் முகத்திரை அனிவது, உயர் மட்டங்களில் ஊழல், சமயகுருக்கள் இழைக்கும் தீங்கு ஆகியவற்றின்பால் அவர் வசை மாரிகள் பொழிந்தார். தாஹிரிஃ உசிதப் போக்குடையவரோ, மெதுவாக செயல்படுபவரோ அல்லர். அவர் வெளிப்படையாகப் பேசினார்; எல்லா மட்டங்களிலும் மனித வாழ்வில் புரட்சியை வேண்டினார்; இறுதியில் அவர் மரண வாசலில் நின்ற போது தமது வாயிலிருந்து புறப்பட்ட சொற்களாலேயே அது நேர்ந்தது என்பதையும் அவர் உணர்திருந்தார். “ஊக்கம்
நிறைந்த சுபாவம்,
தெளிவு மிகுந்த நியாயமான பகுத்தறிவு,
குறிப்பிடத்தக்க சமநிலை,
வசப்படுத்த முடியாத மனவுறுதி கொண்டவர் தாஹிரிஃ”,
என நிக்கோலாஸ் நமக்கு கூறுகின்றார். கோபினோவ் கூறுவது,
“அவரது
உரையின் குறிப்படத்தகும் தன்மை யாதெனில்,
அதன் கிட்டத்தட்ட திடுக்கிட வைக்கும் எளிமையே ஆகும்,
இருந்தும்
மிகவும் குறிப்பிடத்தக்கவையாக தாஹிரியைப் பற்றிய அப்துல் பஹாவின் நினைவுகள் உள்ளன. அவர் சிறுவராக இருந்த போது ஒரு நாள், தாஹிரிஃ அவரை தமது மடியில் உட்கார்த்தி வைத்து, கதவிற்கு வெளியே உட்கார்ந்திருந்த உயர்திரு சைய்யிட் யாஹ்யா-இ-டாராபியுடன் உரையாடிக்கொண்டிருந்தார். சைய்யிட் அவர்கள் பெரும் கல்விமான். உதாரணமாக முப்பதாயிரம் இஸ்லாமிய மரபுக் கூற்றுகளை மனனம் செய்து வைத்திருந்தார்; திருக்குரானின் மையக் கூற்றுகள் அனைத்தையும் தெரிந்து வைத்திருந்ததோடு, பாப் அவர்களின் உண்மையை உணர வைக்க அப்புனித நூலில் இருந்து தகுந்த மேற்கோள்களை எடுத்துக்காட்டும் திறமை பெற்றவர். தாஹிரிஃ அவரைக் கூவி அழைத்து, “ஓ யாஹ்யா! நீர் ஒரு உண்மையான கல்விமானாக இருந்தால், உமது நம்பிக்கையை மெய்ப்பிப்பவைகள் சொற்கள் அன்றி அவை செயல்களாக இருக்கட்டும்,” எனக் கூறினார். சைய்யிட் அதை செவிமடுத்தார், வாழ்க்கையில் முதன் முதலாக அதை புறிந்துகொள்ளவும் செய்தார்; பாப் அவர்களின் சுயஉரிமை கோன்ரிக்கைகளாக இருப்பனவற்றை நிரூபிப்பது மட்டும் அன்றி, தாம் தம்மையே தியாகம் செய்து சமயத்தை பரவச் செய்ய வேண்டும் என்பதையும் உணர்ந்தார். அவர் எழுந்து வெளியே சென்றார், பல இடங்களுக்கு பிராயணம் செய்து சமயத்தை போதித்தார், இறுதியில் நய்ரீஸ் நகரின் செஞ்சாலைகளில் தமது உயிரையும் தியாகம் செய்தார். அவர்கள் அவரது சிரசை துண்டித்து, அதற்குள் வைக்கோலை தினித்து, நகருக்கு நகர் அதை ஊர்வலமாக கொண்டு சென்றனர். தாஹிரி பாப் அவர்களைக் கண்டதே இல்லை. அவர் பாப் அவர்களுக்கு தமது அன்பை வெளிப்படுத்தும் ஒரு செய்தியை அனுப்பினார்: “பிரகாசிக்கும் உமது வதனத்தின் ஒளி பளிச்சிட, உமது திருமுகத்தின் ஓளிக் கதிர்கள் உயரே பாய்ந்தன; நான் உங்கள் பிரபு அல்லவா எனும் வார்த்தையை கூறுங்கள், அது நீரே, நீரே” என நாங்களும் மறுமொழி பகர்வோம். நான் அல்லவா எனும் தாரையின் வரவேற்பொலியால், துன்ப முரசுகள்தான் சப்தமாக முழங்கிட என் இதய வாசலருகே, காலடி பதித்து அழிவுப் படைகளும் கூடாரம் கொண்டன...“ அவர் பாப் அவர்களின் ஜோசப்பின் சூரா பற்றிய விளக்கவுரையை பாரசீக மொழிக்கு மொழி மாற்றம் செய்யும் காரியத்தையும் மேற்கொண்டார். பாப் அவர்களும் தாஹிரியை, அந்த அமரத் திருக்கூட்டத்தினரில் ஒருவராக, உயிர் அட்சரங்களில் ஒருவராக, நியமிக்கவும் செய்தார். சுமார் ஆயிரம் வருடங்களுக்கு முன்பாக, இறை தூதர் முகம்மது அவர்களின் பேரர் இமாம் ஹுசேய்ன் தாகத்தாலும் காயங்களாலும் வீழ்ந்துபட்ட, கர்பிலாவில் அவரை இப்போது கண்ணுறுகின்றோம். அவரது (இமாம் ஹுசேய்னின்) வருடாந்திர விண்ணேற்ற நாளன்று, நகரமே அவரது நினைவால் கருப்பு உடையனிந்து அவருக்காக கதறியழும்போது, இவர் பாப் அவர்களின் பிறந்த நாளை கொண்டாட விழாக்கால உடையனிந்து நிற்கின்றார். இது ஒரு புதிய நாளென அவர்களிடம் கூறுகின்றார்; பழைய வேதனைகள் மறந்துவிட்டன. பிறகு ஹௌடா எனப்படும் குதிரை மேல் பூட்டிய திரைகளிடப்பட்ட ஒரு வித பல்லக்கில் பாக்தாத் சென்று தமது போதனையை தொடர்ந்தார். இங்கு, ஷியா, சுன்ன, கிருஸ்தவ மற்றும் யூத சமூகத்தைச் சார்ந்த தலைவர்கள் அவர் செல்லும் தவறான வழியை அவருக்கு விளக்க முற்பட்டனர்; ஆனால் அவரோ பதிலுக்கு அவர்களை பிரமிக்கச் செய்தார், நிலை குலைந்து ஓட வை த்தார், பிறகு அதன் பயனாக துருக்கிய பிரதேசங்களிலிருந்து வெளியேறும்படி ஆணையும் இடப்பட்டார். பின் பாரசீகம் நோக்கி பிரயாணம் செய்தார், வழி நெடுக பாப் அவர்களுக்கு விசுவாசிகளை திரட்டிடவும் செய்தார். எங்கெங்கும், அரசபுத்திரர்களும், உ லாமாக்களும், அரசாங்க அதிகாரிகளுமென அவரைப் பார்க்க திரண்டனர்; பல பள்ளிவாசல்களின் பீடங்களிலிருந்து அவருக்கு வாழ்த்துரைகள் எழுந்தன; அதில் ஒன்று, “அதி உயர்ந்தவை என நாம் அடைந்துள்ள அனைத்தும் அவரது பரந்த அறிவிற்கு முன் னால் ஒரு துளிக்குச் சமமே” என்பதாகும். இது, ஊமைகளாகவும், வெறும் நிழல்களாகவும், தங்கள் வாழ்க்கைச் சக்கரத்தை முகத்திரைக்குப் பின்னால்: திருமணமும், நோயும், குழந்தைப் பேறும், சாதம் கிண்டுவதும், ரொட்டிகள் சுடுவதும், வெல்வெட் துனியில் இலைகள் தைப்பதும், பிறகு ஊர் பேர் தெரியாமல் இறந்து போவதும் என இருக்கும் பெண்கள் நிறைந்த ஒரு நாட்டில் பிறந்த ஒரு பெண்ணைப் பற்றி கூறப்பட்டதாகும். கர்பிலா, பாக்தாத், கிர்மான்ஷா, பிறகு ஹமடான் நகர்களுக்கு அவர் விஜயம் செய்தார். முடிவில் அவரது தந்தை அவரை காஃஸ்வின் திரும்பும்படி ஆணையிட்டார். அவர் காஃஸ்வின் திரும்பியவுடன், அவரது கனவனான முஜ்டாஹிட், அவரை தமது வீட்டிற்கு வந்து தம்மோடு வாழ உத்தரவிட்டான். அதற்கு அவரது மறுமொழியாக: “அகம்பாவமும் கர்வமும் மிக்க எனது உறவினனிடம் கூறுங்கள்... ” “என் விசுவாசமான துணைவனாகவும் சகாவாகவும் இருப்பதே உமது ஆவலாக இருந்திருந்தால் நீர் என்னை கர்பிலாவில் சந்திக்க விரைந்து வந்து, காலால் நடந்து என் பல்லக்கை காஃஸ்வின் வரை வழி நடத்தி வந்திருப்பீர். நானும் அக்கரையின்மை எனும் உமது துயிலிலிருந்து உம்மை எழுப்பி உண்மைக்கான வழியையும் உமக்கு.காண்பித்திருப்பேன். ஆனால் இது நடக்கப்போவதில்லை... இம்மையிலும் சரி மறுமையிலும் சரி நான் உம்முடன் இனைந்திருப்பதென்பது ஆகாது. என் வாழ்விலிருந்து உம்மை நிரந்தரமாக வீசி எறிந்துவிட்டேன்.” அதன் பிறகு அவரது மாமாவும் கனவனும் அவரை சமயத் துரோகி என பிரகடனம் செய்து, அவருக்கெதிராக இரவும் பகலுமாக சதி செய்தனர். ஒரு நாள் காஃஸ்வின் வழியாக ஒரு முல்லா போய்க்கொண்டிருந்தார், அப்போது முரடர்கள் சிலர் ஒரு மனிதனை தெரு வழியாக இழுத்துச் செல்வதைக் கண்டார்; அவர்கள் அந்த மனிதனின் தலைப்பாகையை தாம்புக்கயிறு போல் அவரது கழுத்தில் கட்டி அவரை இம்சித்துக் கொண்டிருந்தனர். வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தோர், அந்த மனிதன், பாப் அவர்களின் சீடர்கள் இரு வரைப் பற்றி புகழ்ந்து பேசி விட்டதாக தெரிவித்தனர்; அதற்காக தாஹிரிஃயின் மாமா அவரை ஊரைவிட்டு வெளியேற்றுகிறார் எனவும் தெரிவித்தனர். அந்த முல்லா மனக் கிலேசமுற்றார். அவர் ஒரு பாப்’இ அல்ல, ஆனால் இம்சிக்கப்பட்ட அந்த இருவரையும் அவர் நேசித்தார். அவர் கத்திகள் செய்யப்படும் சந்தையடிக்குச் சென்று குத்துவாள் ஒன்றையும் மிகக் கூர்மையான ஈட்டி முனை ஒன்றையும் வாங்கிக்கொண்டு, அவற்றை உபயோகிக்க உசிதமான நேரத்திற்காக காத்திருந்தார். ஒரு நாள் காலைப்பொழுதில், மூதாட்டி ஒருவர் நொண்டிக் கொண்டு பள்ளிவாசலில் நுழைந்து, ஒரு கம்பளத்தை விரித்தார். அதன் பிறகு தாஹிரிஃயின் மாமா அதன் மீது தனியே பிரார்த்தனை செய்வதற்கு வந்தார். அவர் நெடுஞ்சான் கிடையாக தரையில் படுத்தபோது நமது முல்லா ஓடிச் சென்று அவர் கழுத்தில் ஈட்டி முனையை பாய்ச்சினார். அவர் ஓலமிட, முல்லா அவர் உடலைத் திருப்பிப் போட்டு, குத்துவாளை எ டுத்து அவர் வாயில் ஆழமாக குத்தி இரத்தம் பீரிட்டோட அவரை பள்ளிவாசலின் தரையிலேயே கிடக்க விட்டுச் சென்றார். அந்தக் கொலையால் காஃஸ்வின் நகரமே அல்லோலகல்லோலமாகியது. அந்த முல்லா தானே கொலை செய்தாரென ஒப்புக்கொண்டும், அவர்தான் கொலை செய்தார் என கொலையுண்டவர் சாவதற்கு முன் வாக்குமூலம் கொடுத்த போதும், ஒரு பாவமும் அறியாத பல மக்கள் குற்றஞ்சாட்டப்பட்டு கைதிகளாக்கப்பட்டனர். தெஹரானில், பஹாவுல்லா ஒரு சில நாட்கள் கொண்ட சிறை தண்டனையான தமது முதல் சித்திரவதையை அனுபவித்தார் ஏனெனில் அவர் இவர்களுக்காக வாதாடி அவர்களுக்கு உணவும் பணமும் கொடுத்தாராம். இறந்தவரின் வாரிசுகள் ஒன்றுமறியாத ஒரு அராபியரை, கர்பிலாவைச் சேர்ந்த ஷேய்க் சாலே என்பவரை, கொண்றனர |