பெண்கள்: சமத்துவமும் அமைதியும்
டாக். பீட்டர் காஃன்
இங்கு, பெண்களும் அமைதியும் எனும் தலைப்பில் இன்றிரவு நான் நிகழ்த்தவிருக்கும் சொற்பொழிவு குறித்து மகிழ்ச்சியடைகின்றேன். முதலில் இத்தலைப்பிலான ஒரு விஷயம் ஏன் இங்கு விவாதிக்கப்படுகிறது என்பது குறித்தும், பெண்களுக்கும் அமைதிக்கும் இடையில் என்ன தொடர்புள்ளது என்ப குறித்தும் நாம் ஆலோசிக்கவிருக்கின்றோம். இந்த இரண்டு விஷயங்களுக்கிடையிலான உறவவை, சமயத்தின் உலக மையத்தில் இருந்து கிடைத்துள்ள அசாதாரணமான மற்றும் குறிப்பிடத்தக்க எழுத்துக்களின் வாயிலாக காணலாம். உதாரணமாக, அப்துல் பஹா பின்வருமாறு எழுதி யுள்ளார்:
ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையிலான சமத்துவம் உணரப்படும்போது, யுத்தங்களுக்கான அஸ்திவாரம் முற்றாக அழிக்கப்பட்டுவிடும். சமத்துவமின்றி இது சாத்தியப்படாது." மற்றும் சமீபத்தில், "உலக அமைதிக்கான வாக்குறுதி," எனும் தங்களின் சாசனத்தில் உலக நீதி மன்றம் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளது: பெண்களின் விடுதலை, அதாவது, இருபாலர்களுக்குமிடையிலான முழு சமத்துவம், அடையப்படுவதானது, மிக முக்கியமான, ஆனால் அவ்வளவாக அங்கீகரிக்கப்படாத முன் தேவைகளில் ஒன்றாகும். இதிலிருந்து நான் புரிந்கொள்வது என்னவென்றால், உலகத்தில் இரு அடிப்படையான கேள்விகள் உள்ளன என்பதாகும். ஒன்று ஆண் பெண் சமத்துவம் அடையப்படுவது குறித்தது மற்றது, உலக அமைதி அடையப்படுவது குறித்தது.
அப்துல் பஹாவிடமிருந்தும், உலக நீதி மன்றத்திடமிருந்தும் கிடைத்துள்ள இவ்விரு வாக்குமூலங்களும், இவ்விரு விஷயங்களையும் இணைக்கின்றன. மற்றும், ஒரு விஷயம் மற்றதற்கான முன்தேவையும் ஆகும் என குறிப்பிடுகின்றன. ஆகையால், உலக அமைதி அடையப்படுவது குறித்து நாம் கொண்டுள்ள அக்கறை, முதலில் ஆண் பெண் சமத்துவத்தின்பால் கண்டிப்பாக செலுத்தப்பட வேண்டும் எனவே பொருள்படுகின்றது. இந்த விஷயம் பஹாய் போதனைகளின் சக்தி, செல்வாக்கு ஆகியவற்றின் மூலம் எவ்வாறு அடையப்படப்போகின்றது என்பது குறித்தும் நாம் சிந்திக்கவேண்டும்.
ஆக, இன்றிரவு நான் மூன்று தலையாய விஷயங்களைக் கருத்தில் கொள்ள விரும்புகிறேன்: முதலாவதாக ஆண் பெண் சமத்துவம் குறித்த கேள்வி, இரண்டாவதாக, அமைதி அடையப்படுவதற்கும் அதில் பெண்கள் ஆற்றக்கூடிய பங்கு குறித்தும் எழக்கூடிய கேள்வி, மூன்றாவதாகவும் சுறுக்கமாகவும், இந்த சமத்துவம் அமுல் செய்யப்படுவதை பராமரிப்பதற்கு பஹாய் சமூகத்திற்கு கைவசம் உள்ள வாய்ப்புக்கள் குறித்த கேள்வி. இதை நாம் நிகழ் காலத்தில் அமைந்துள்ள சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு பார்க்கப்போகின்றோம். இன்றைய உலகம், பல விதமான கருத்துக்களை வெளிப்படுத்துகின்றது. ஒரு புறம், பழமை விரும்பிகள் சமயத்தின்பாலும், தத்துவங்களின்பாலும் கொண்டுள்ள வெறியின் வளர்ச்சியும் அதிகரிக்கும் ஆதிக்கமும் உள்ளது. இது பெரும்பாலும் பெண்களுக்கு அதிக உரிமைகள் வழங்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றது. மறுபுறம் பார்க்கையில், விரிவான ஆண்கள் எதிர்ப்பு வெறியை வெளிப்படுத்தும் பெண்கள் இயக்கங்கள் உள்ளன. இக்கேள்வியை, அமைதிக்கான சாசனத்தில் ஐக்கியம் அடையப்படுவதற்கான முயற்சியில் நமது பஹாய் சமூகத்தையே ஒரு முன்மாதிரியாக உலக நீதி மன்றம வழங்கியிருப்பதன் கண்ணோட்டத்தில் காண வேண்டும். உலக நீதி மன்றம், புலப்படாத நிலையிலிருந்து நாம் வெளிப்பட்டிருப்பதானது, மேலும் மேலும் அதிகரிக்கும் எண்ணிக்கையிலான கூரிய பார்வையும், நம்பிக்கையின்மையும், சந்தேகப்போக்கும் உடைய மக்கள் பஹாய் சமூகத்தை கூராய்வு செய்யப்போகின்றனர் எனக் கூறியுள்ளது. அவர்கள், நமது சமயத்தில் விவரிக்கப்பட்டுள்ளதற்கும், இன்னாளில் நமது நடத்தைக்கும் இடையில் வேறுபாடுகளைக் கண்டுபிடிக்கும் வகையில் நமது வெற்றிகளையும் நடந்துகொள்ளும் முறைகளையும் கூராய்வு செய்வர். இவை யாவற்றையும் வைத்தே நாம் "ஆண் பெண் சமத்துவம்" குறித்த கேள்வி பற்றியும், அதைச் செயல்படுத்துவதற்காக உலக பஹாய் சமூகம் எடுக்கும் முயற்சிகள் குறித்தும் ஆய்வு செய்யவேண்டும். காலங்காலகமாக பெண்களுக்கு அளிக்கப்பட்ட ஸ்தானம் மற்றும் அவர்கள் நடத்தப்பட்டு வந்துள்ள முறை குறித்தும் ஒரு சுருக்கமான வரலாறு ரீதியிலான ஆய்வு செய்வதன் மூலம் நான் எனது உரையை ஆரம்பிக்க விரும்புகின்றேன். “நாம் ஏன் இதைச் செய்ய வேண்டும், ஏன் பஹாய் போதனைகளை மட்டும் ஆய்வு செய்து அவற்றில் பெண்கள் சமத்துவம் குறித்து என்ன கூறப்பட்டுள்ளது என மட்டும் பார்த்தால் போதாதா?”, என ஒரு சிலர் வினவலாம். இதற்கு எனது மறுமொழி என்னவெனில், காலங்காலமாக பெண்கள் நடத்தப்பட்டு வந்துள்ள விதத்தை நாம் ஆராய்வது பயனுள்ள ஒன்றே என்பதாகும். ஏனெனில், பஹாய் போதனைகளை நன்கு கண்ணோட்டமிட்டும் அவற்றை மெச்சுவதற்கும் உரிய ஓர் ஒப்பீட்டை இது வழங்குகிறது. பஹாய் போதனைகளின் சிறப்புத்தன்மைகள் குறித்தும், அவற்றின் குறிப்பிடத்தக்கமை குறித்தம், மற்றும் அவற்றின் நீண்ட கால விளைவுகள் குறித்தும் ஆய்வு செய்திட இது உதவுகின்றது. பெரும்பாலும் மாற்று வகைகளில் இயங்கும் பஹாய் அல்லாத ஒரு சூழ்நிலையில் நமது கோட்பாடுகளை அமுல் செய்திட முனைவது குறித்த சவால்களை பஹாய்கள் எனும் முறையில் நாம் மேலும் நன்கு அறிந்துகொள்ள இது அதிகம் உதவுகின்றது.
ஆரம்பமாக, வரலாறு சார்ந்த ரீதியில் பெண்கள் எவ்வாறு அனுகப்பட்டுள்ளனர் என்பதை சரித்திர உணர்வோடு நான் கண்ணோட்டமிட விரும்புகின்றேன். இது, நிச்சயமாகவே வாதத்துக்கிடமான ஒரு விஷயமாகும். ஒரு சிலர் வரலாற்று காலம் முழுவதும பெண்கள் அநீதியாகவே நடத்தப்பட்டுள்ளனர் என வாதிடுவர். பிறர், இது பெரிதுபடுத்தப்பட்ட ஒரு விஷயம் எனவும், உண்மையில் பெண்கள் அவ்வாறு நடத்தப்படவில்லை எனவும் கூறுவர். ஆகவே, இது பல வேளைகளில் இணக்கம் காணப்பட முடியாத ஒரு விஷயமாகும். பல வேளைகளில், சமுதாய நிலையிலும், அல்லது பஹாய் சமூகத்திலும் கூட சரித்திரம் முழுவதும் பெண்கள் நடத்தப்பட்ட விதம் குறித்து வாதங்கள் எழுவதைப் பார்க்கலாம். ஆனால், இக்கேள்வி மிக எளிதில் தீர்க்கப்படக் கூடிய ஒன்றாகும். அதற்காக நாம் அப்துல் பஹாவின் அதிகாரபூர்வ எழுத்துக்கள்பால் திரும்பவேண்டும். அவ்வாறு திரும்பி, வரலாறு முழுவதும் பெண்கள் எவ்வாறு நடத்தப்பட்டுள்ளனர் என்பது குறித்து அவர் என்ன கூறுகிறார் என்பதைக் காண்பதன் மூலம் இப்பிரச்சனைக்கு நாம் தீர்வு காணலாம். இவ்விஷயம் குறித்து அப்துல் பஹா எழுதியுள்ளவற்றிலிருந்து இரு பத்திகளை நான் உங்களுக்காக படித்துக் காட்ட விரும்புகிறேன்.
அவர் முதலாவதாக கூறுவது: கடந்த காலங்களில் பெண்களும ஆண்களும் சமமானவர்கள் எனக் கருதப்படவில்லை. அதாவது, ஆணுக்குப் பெண் தாழ்ந்தவளே என்பதும், இது பெண்களின் உடல்கூறு மற்றும் படைப்பு ரீதியாகவும் கருதப்பட்டு வந்தது. பெண்கள் நுண்ணறிவில் மிகவும் தாழ்ந்தவர்கள் எனக்கருதப்பட்டது. இந்த எண்ணம் அனைத்துலக ரீதியானதாகவும், பெண்கள் மிகவும் முக்கியமான விஷயங்களில் பங்கெடுப்பதிலிருந்து தடுக்கவும் பட்டனர். ஒரு சில நாடுகளில், மனிதனுக்குத் தாழ்வான ஒரு படைப்பாக பெண்கள் கருதப்பட்டும் அவ்வாறு போதிக்கப்படும் அளவிற்கும் மனிதன் சென்றான். இவ்விஷயம் குறித்த அப்துல் பஹாவின் பல்வேறு எழுத்துக்களிலிருந்து மேலும் ஒன்று. அவர் கூறுவது: முற்காலத்தில், இந்தியா, பாரசீகம் மற்றும் கிழக்கு நாடுகள் முழுவதும், அவள், அதாவது பெண், ஒரு மனிதஜென்மமாகவே கருதப்படவில்லை. ஓரு சில அரபு இனங்கள், தங்கள் பெண்டிர்களை தாங்கள் வளர்க்கும் கால்நடைகளோடு சேர்த்தே கணக்கிட்டனர். அவர்களுடைய மொழியில் பெண்களுக்கான பெயர்ச்சொல் 'கழுதை' எனும் சொல்லின் அர்த்தத்தையும் கொண்டிருந்தது. அதாவது அச்சொல் கழுதை மற்றும் பெண் என இரு பொருள்பட இருந்தது. ஒரு மனிதனின் செல்வம் அவன் பெற்றிருந்த கால்நடைகளைக் கொண்டே கணக்கிடப்பட்டது. ஒரு மனிதனைப் பார்த்து ஒருவர் இகழ்ச்சியாக கூறக்கூடியவற்றில் "பெண்" எனும் வார்த்தையே அதி தாழ்வானதாகும். பண்டைய காலங்களில் பெண்கள் எழுதவோ படிக்கவோ தெரியாமல் இருப்பதே விவேகமாகும் எனக் கருதப்பட்டது. அவள் அடிமை வேலை புரிவதிலேயே தனது காலத்தை தள்ளவேண்டும்.
ஆகவே, தெளிவாகவும் ஒரு சில வார்த்தைகளிலும் காலங்காலமாக பெண்கள் பொதுவாகவே நடத்தப்பட்ட விதம் குறித்து அப்துல் பஹா கூறியுள்ளதை நாம் காண்கின்றோம். அப்துல் பஹா இதை ஏன் எழுத வேண்டும்? நான் படித்த இந்த கடுமையான வார்த்தைகளின் வாயிலாக அவர் என்ன கூற விழைகிறார்? சரித்திரக் குறிப்புகளைக் காண்கையில் பெண்கள் குறித்த பாகுபாடுகள் பல சரித்திர ரீதியான எண்ணங்களாக அல்லது உருவகங்களாக வெளியிடப்பட்டிருப்பதைக் காணலாம். உதாரனமாக, பெண் என்பவள் தான் ஒரு தாழ்வான பிறவி என்பதால் இயற்கை அன்னையோடு கூட்டுச் சேர்ந்து கொண்டவள், கருவளத்தின் மூலாதாரம் எனும் வகையில் மர்மமான, கட்டுப்படுத்த முடியாத சக்திகளைக் கொண்டவள், பெண் என்பவள் இயற்கை சக்திகளை பலியிடுபவள் என்பதெல்லாம் சரித்திரக் கருத்துக்கள். இக்கருத்துக்களை பண்டைய கால மேல்நிலை பெண் தெய்வங்களின் வாயிலாகவும், பழைய ஏற்பாட்டில் சாலமனின் பாடல்களில் பயன்படுத்தப்பட்ட உவமைகளின் வாயிலாகவும் நாம் காணலாம். பெண் என்பவள், மர்மான ஒரு சக்தி படைத்தவள் எனவும். அவள் கட்டுப்பாடுகள் மூலமாகவும், புனிதப்படுத்தும் சடங்குகள் வாயிலாகவும் அடக்கப்பட வேண்டியவள் எனவும் கருதப்பட்டு வந்தது.
பெண் என்பவள் தாழ்வானவளாகவும், மாறுபட்ட ஒரு பிறவியாகவும், மாறும் குணம் கொண்டவளாகவும், உணர்ச்சிவசப்படுபவளாகவும், கல்வி பெறுவதற்கு ஆற்றலற்றவள் என்பதும் மற்றொரு கருத்தாககும்.
பெரும்பாலும் மரபுச்சமயங்களில் காணப்படும், பெண்கள் சமத்துவமற்ற வகையில் நடத்தப்படும் மற்றொரு முறையாக, அவள் கற்புநெறியின் முன்மாதிரியெனவும், பக்தை எனவும், கன்னித் தன்மையுடையவள் எனவும், கீழ்ப்படிபவள் எனவும், சாது எனவும், ஆணுக்கு அடிபனிபவள் எனவும், வீட்டுப் பணிகளுக்குத் தன்னை முழுமையாக ஒப்படைத்துக் கொண்டவள் எனவும், சட்டரீதியிலோ அரசியல் ரீதியிலோ அதிகாரம் இல்லாதவள் எனவும், பகுத்தறிவு சார்ந்த எந்த விஷயமாயினும், அதை தனது கனவனிடமோ, தந்தையிடமோ, சகோதரனிடமோ, சுருக்கமாக ஓர் ஆணிடமே கொண்டுசெல்ல வேண்டியவள் எனக் கருதப்படுவதே உள்ளது. இந்தக் கருத்து, அதிகமான வரலாற்றுக் குறிப்புகளில் அடங்கியும், ஒரு சில சட்டமுறைகளிலும் இணைக்கப்பட்டிருந்தது. 1804ல் பிரான்ஸ் நாட்டில் நெப்போலியனின் சமூக சட்டமுறை, உரிமைகள் இல்லாதவர்களென, சிறார்களையும், திருமணமான பெண்களையும், குற்றவாளிகளையும், மற்றும் மனோநிலை பாதிக்கப்பட்டவர்களையும் குறிப்பிடுகின்றது. நெப்போலியனின் 904 சட்டக் குறிப்பின்படி பெண்களுக்கு உரிமைகள் ஏதும் கிடையாது. ஷொப்பன்ஹோவர் என்பவர், பெண்கள் தங்கள் இயல்பினால் கட்டுப்பாட்டிற்குள் வைக்கப்பட வேண்டியவர்கள் எனவும், அவர்களுக்கு பாதுகாப்பவர் ஒருவர் அவசியமெனவும், அவர்கள் கீழ்படிதலுக்கென படைக்கப்பட்டவர்கள் எனவும் கூறியுள்ளார். ஆகவே, இந்தப் பல்வேறு மற்றும் மாறுபட்ட கண்ணோட்டங்களின் வாயிலாக பெண்கள்பாலான சமத்துவமற்ற போக்கு வெளிப்படுத்தப்பட்டது.
இந்த நிலை குறித்து சமயம் என்ன செய்துள்ளது? மீண்டும், இவ்விஷயம் வாதத்திற்குட்படுவதையே காண்கின்றோம். பெண்களை நடத்தும் விதம் குறித்து சமயங்களின் பங்கைக் கண்ணுறுகையில், பலதரப்பட்ட கண்ணோட்டங்கள் இருக்கின்றன. மீண்டும் நாம் நமது சமயத்தின் புனிதமும் அதிகாரமும் நிறைந்த எழுத்துக்களின் பக்கமே வழிகாட்டலுக்காக திரும்பவேண்டியுள்ளது. இந்தப் பஹாய் எழுத்துக்களை நாம் ஆராய்கையில், சமயங்களில் பெண்கள் நடத்தப்பட்ட விதத்தை புரிந்துகொள்ள எனக்கு உதவும் வகையில் மூன்று கோட்பாடுகள் இருப்பதைக் காண்கின்றேன்.
முதல் கோட்பாடு பஹாவுல்லாவின் ஒரு கூற்றில் காணப்படுகின்றது. அவர்: "கடவுளின் பார்வையில் பெண்களும் ஆண்களும் என்றும், இனி என்றென்றும், சமமானவர்களே. ஆகவே, இது முதல் கோட்பாடு, அதாவது - கடவுளின