பஹாய் சமயம்

 

ஓர் அறிமுகம்

 

1844ம் ஆன்டில் பாரசீக நாட்டில் உதித்த பஹாய் சமயம் இன்று குறைந்தது 300க்கும் அதிகமான நாடுகளிலும் பிரதேசங்களிலும் சுமார் 65 லட்சம் நம்பிக்கையாளர்களைக் கொண்ட ஒரு சுதந்திரமான உலகளாவிய சமயமாகும். பஹாய்கள் இன்று உலகம் முழுவதும் 120,000க்கும் அதிகமான உள்ளூர் சமூகங்களில் வசித்து வருகின்றனர்.

பஹாய் சமயத்தை வெளிப்படுத்தியவரின்பெயர் பஹாவுல்லா. “பஹாவுல்லா”என்பதன் மொழியாக்கம், “இறைவனின் ஓளி”அல்லது “தேஜஸ்” என்பதாகும். வடமொழியில் "விஷ்னு யாஷா" எனவும் மொழிபெயர்க்கலாம். இதையே ஆங்கிலத்தில் "Glory of God" என கூறப்படுதின்றது. பஹாவுல்லா, இவ்வுலக மாற்றங்களும் வாய்ப்புக்களும் மட்டுமே வாழ்வு என்பதல்ல எனவும், ஆன்மாவில் ஏற்படும் வளர்ச்சியே அதன் உண்மையான சிறப்பு எனவும், மனித வாழ்வு, அதாவது ஆன்மாவின் வாழ்வு இவ்வுலகின் ஒரு குறுகிய காலத்தில் நடைபெற்று இறைவனின் வெவ்வேறு உலகங்களில் என்றும் நிலையாகத் தொடர்கின்றது எனவும் போதித்தார். பஹாவுல்லாவின் செய்தியின் சாரம் மனுக்குல ஒற்றுமை குறித்ததாகும். கடவுள் ஒருவரே, மனுக்குலம் ஒன்று, உலக சமயங்கள் அனைத்தும் ஒரே உதயபீடத்தைக் கொண்டிருக்கின்றன என்பவை அடிப்படை போதனைகளாகும். கடவுளை நோக்கிய பாதை பலவென கூறுப்படும் வேளையில், பஹாவுல்லா, இறைவனை நோக்கிய பாதை ஒரே பொதுப் பாதை எனவும், உலக மக்கள் அனைவரும் அதில் வெவ்வேறு நிலைகளில் பயணம் செய்து கொண்டிருக்கின்றனர் எனவும் வெளிப்படுத்துகின்றார்.

பஹாவுல்லாவின் பிரார்த்தனை ஒன்றில் பின்வருமாறு கூறப்படுகின்றது:

இறைவா, நீர் மனிதர்கள் யாவரையம் ஒரே பெற்றோரிலிருந்து ஆக்கியுள்ளீர்; எல்லோரும் ஒரே குடும்பமாய் வாழ விதித்துள்ளீர்....

மனுக்குலம் ஒரே இறைவனை தனது படைப்பாளராக கொண்டுள்ளது; ஒரே மண்ணிலிருந்து படைக்கப்பட்டுள்ளது. மனிதனின் வெளித்தோற்றங்கள் யாவும் அவனுடைய உண்மையான ஆன்மீக நிலையை பிரதிபலிப்பவை அல்ல எனவும் பஹாவுல்லா போதித்தார். உலக சமயங்கள் அனைத்தும் கடவுளின் நல்விருப்பத்தையும் நோக்கத்தையும் படிப்படியாக வெளிப்படுத்துவதற்காகவே தோன்றியுள்ளன எனவும் பஹாவுல்லா போதிக்கின்றார். உலகளாவிய மனித சமூகம் செழுமை பெற வேண்டுமானால், அது சில அடிப்படை கொள்கைகளின் அஸ்திவாரத்தில் அமைக்கப்பட வேண்டும். அவற்றில் முக்கியமானவை வருமாறு:

  • எல்லாவிதமான இன, மத, கலை-கலாச்சாரம் சார்ந்த தப்பெண்ணங்கள் அகற்றப்படவேண்டும்
  • ஆண் பெண் இருபாலருக்கிடையில் முழு சமத்துவம் நிலவவேண்டும்
  • உலகின் பிரதான சமயங்களுக்கிடையிலான அடிப்படை ஒற்றுமை கண்டுகொள்ளப்பட வேண்டும்
  • மிகையான ஏழ்மையும் மிகையான செழுமையும் அகற்றப்படவேண்டும்
  • அனைவருக்கும் கட்டாயமாக கல்வி அளிக்கப்பட வேண்டும்
  • அனைவரும் தன்னிச்சையாக உண்மையை ஆராயவேண்டும்
  • அறிவியல் சமயம் ஆகியவற்றுக்கிடையிலான இணக்கத்தை கண்டுகொள்ளுதல்
  • சமூக பாதுகாப்பு மனுக்குல ஒற்றுமை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட ஓர் உலகப்பொதுநல ஸ்தாபனம் நிறுவப்பட வேண்டும்

  • தாய் மொழியோடு ஓர் உலகப்பொதுமொழியை ஏற்றுக்கொள்வது
  • அனைத்துலக அளவில் ஒரே பொருளாதார முறையை ஏற்படுத்துதல்
  • குழந்தைகள் அனைவருக்கும் கட்டாயமாக கல்வி புகட்டப்பட வேண்டும்

Û

People of every nationality, race, ethnic group, and  ...

பல்வேறு இன, நிற, நாடுகளைச் சார்ந்த பஹாய்கள் ஒன்றுகூடியுள்ளனர்.

Children and youth with painted faces during a July  ...

குழந்தைகள் நிகழ்ச்சி

Bahá’í devotional meeting in Biratnagar, Nepal, 2002.

நேப்பாளத்தில் பஹாய் பிரார்த்தனைக் கூட்டம்

கம்போடிய இளைஞர்கள் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்

Participants in the performing with masks course at  ...

இங்கிலாந்து நாட்டு பஹாய் அகாடமியின் கலைஞர்கள்

Panelists from a Bahá’í women’s conference in Hong  ...

ஹாங்காங்கில் பஹாய் பெண்கள் மாநாடு